இன்றைய வானிலை தொடர்பிலான எச்சரிக்கை..!
[2024-07-29 09:23:31] Views:[10]
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60KM வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கரையை அண்மித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50KM வேகத்தில் வீசக்கூடும். அதேநேரம் கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகவும் அல்லது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.










