வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கான அறிவித்தல்
[2024-07-25 11:04:26] Views:[11]
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் 26ந்திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிய வருகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-40 km வேகத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்படுகிறது










