நாட்டில் வானிலை நிலவரம்
[2024-07-21 12:02:22] Views:[11]
இன்று (21)சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் தீவின் மற்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்வதோடு காற்றின் வேகமானது 30 முதல் 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.










