இரு சகோதரர்கள் போதை மாத்திரைகளுடன் கைது
[2024-07-18 19:10:34] Views:[10]
நேற்று (17) திருகோணமலை உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










