வெளிநாட்டு ஆசை காட்டி 06 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி - யாழில் சம்பவம்
[2024-07-18 11:24:43] Views:[10]
பல்வேறு நபர்களிடம் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை பெரும் மோசடி செய்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததாகவும் அம்முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்து குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அந்த பெண்ணினை வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்டவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










