யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குருதி மாற்றீடு உபகரணம் வழங்கி வைப்பு
[2024-07-17 19:13:01] Views:[9]
இன்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளதுடன் விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளளையும் பார்வையிட்டு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளதுடன் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.
இந்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் P G மகிபால மற்றும் Dr அசேல குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சிர்த்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்திய மூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.










