யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து சென்ற அரச பேருந்து மீது தாக்குதல் - பயணி ஒருவர் காயம்
[2024-07-17 14:50:45] Views:[10]
நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்று கொண்டிருந்த அரச பேருந்து மீது கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து மதுபான போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்
மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










