யாழில் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண்..!
[2024-07-14 11:16:35] Views:[9]
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பறாளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று சுற்றி வளைத்தனர்.
இதன்போது 47 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரம் செய்வதாக ஊர் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில், யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும், யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினரும் இணைந்து குறித்த பெண்ணை 10 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்
பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.










