பாகிஸ்தான் இரணுவத்திற்கு உதவிய இலங்கை இரணுவம்..!
[2024-07-14 09:44:02] Views:[9]
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ கண் மருத்துவமனைக்கு கண் கருவிழிகளை தானமாக வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நன்கொடையானது பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கையர்களால் பரிசாக வழங்கப்பட்ட 26,215 வது கண் கருவிழி எனப்படுகிறது.
தீவிரவாதச் செயல்களால் கண் பார்வையை இழந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஓய்வுபெற்ற பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த கருவிழிகள் இடமாற்றம் செய்யப்படும்.
பாகிஸ்தான் மக்களுக்கும் குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இலங்கை மக்கள் உதவுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக உயர்ஸ்தானிகர் அட்மிரல் ரவி தெரிவித்தார்.










