யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில்..!
[2024-07-13 20:20:45] Views:[9]
முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம் (13) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து, யாழ் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த உதவித் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்ததுடன், தகுதிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.
தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3500 ரூபாவும்உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










