முப்படையினரும் பங்கேற்ற இரத்ததான நிகழ்வு...!
[2024-07-13 15:31:20] Views:[12]
மூதூர் தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இரத்ததான முகாம் இடம்பெற்றது.
"உதிரம் தந்து உறவுகளின் உயிர்களை காப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மூதூர்-நடுத்தீவு சமூக நலன்புரிச் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இவ் இரத்ததான முகாமில் முப்படையினர், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, சர்வ மத தலைவர்கள், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு முப்படையினர், இளைஞர்கள், நலன் விரும்பிகள்,பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.










