சிக்கிய யாழ்ப்பாண நபர் - நடந்தது என்ன?
[2024-07-11 10:58:34] Views:[10]
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண நபரொருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஆஸ்திரியாவிற்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
யாழ்.தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர் நேற்றிரவு (09) இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார் எனவும்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டதாகவும தகவல்கள் வெளியாகியுள்ளன.










