தீக்கிரையான தும்பு தொழிற்சாலை - முல்லைத்தீவில் சம்பவம்
[2024-07-10 10:43:05] Views:[9]
நேற்று புதுக்குடியிருப்பு - விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையொன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண் தொழில் முயற்ச்சியாளர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் இந்த தொழிற்சாலையில் 12 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் தும்புகளை பிரித்து காயவிடப்பட்ட இடத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










