மண்சரிவு எச்சரிக்கை !
[2024-07-08 10:37:24] Views:[13]
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகங்களுக்கு சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் வரை அமுலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய புலத்சிங்கள, மத்துகம, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவான, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, அலபாத்த, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










