கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நெடுந்தீவு மக்கள் அஞ்சலி..!
[2024-07-08 10:06:19] Views:[9]
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நெடுந்தீவில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளை அலுவலகத்தில் நேற்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கிளை செயலாளர் வி.ருத்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வணபோதகர் யூட் எழில் அமுதன் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரி, கட்சியின் நெடுந்தீவு கிளை உபதலைவர் மைக்கல் யேசுதாஸன், கட்சியின் நெடுந்தீவு கிளை உபசெயலாளர் சுதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.










