ஆற்றில் நீராடச்சென்ற நபர் முதலைக்கு இரையாகினார்..!!
[2024-07-07 11:19:13] Views:[9]
நேற்றைய தினம் காலை வேளையில் மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ளார்.
முதலைக்கு இரையான நபரின் சடலம் பொலிஸார் மற்றும் வனஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சுமார் 30 முதல் 35 வயது வரையிலான நபர் ஒருவரே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.










