இரவு தபால் ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு..!
[2024-07-06 09:38:21] Views:[11]
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்து நேற்று இரவு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பண்டாரவளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் குறித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இரவு நேர அஞ்சல் தொடருந்தானது இரண்டு இயந்திரங்களைக் கொண்ட நிலையில் தொடருந்தின் முன்பக்க இயந்திரம் பண்டாரவளைக்கும் மற்றும் தியத்தலாவைக்கும் இடையிலான பாலத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










