கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு தோள்கொடுக்கும் படையினர்..!
[2024-07-04 11:03:58] Views:[10]
இந்து பக்தர்களால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் கதிர்காமம் பாத யாத்திரையின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதயாத்திரை குமண தேசிய வனப் பூங்காவில் ஆரம்பமாகி சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது.
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவிலான இந்து பக்தர்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான வசதிகள் படையினரால் செய்து கொடுக்கப்படுகின்றன.










