லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!
[2024-07-02 21:16:57] Views:[10]
இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5KG எரிவாயு சிலிண்டர் 100/= ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690/= ரூபாவாகும்.
5KG எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40/= ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482/= ரூபாவாகும்.
2.3KG எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18/= ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694/= ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
Q
மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










