எல்லை தாண்டிய குற்றத்திற்காக 25 தமிழக மீனவர்கள் யாழில் கைது..!
[2024-07-01 10:58:12] Views:[11]
யாழ்ப்பாணம்-நெடுந்தீவுக்கு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அத்துடன் இதன்போது 04 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










