யாழில் கூரிய ஆயுதங்களுடன் பதுங்கிருந்தவர்கள் கைது...!!
[2024-06-29 10:43:57] Views:[9]
யாழ். கோப்பாய் பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள் மற்றும் கோடரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
சந்தேகநபர்கள் 24 வயதுடையவர்கள் என்றும், பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் என்ன காரணத்துக்காக கோப்பாய் பகுதியில், ஆபத்தான ஆயுதங்களுடன் தங்கியிருந்தனர் என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்படுகின்றன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.










