ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
[2024-06-25 19:25:54] Views:[12]
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டில் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.










