கொழும்பில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!
[2024-06-24 20:38:38] Views:[11]
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1070 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரிமைப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










