தெங்குசார் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு..!
[2024-06-23 21:35:27] Views:[10]
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார்.
தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தேங்காய் எண்ணை உற்பத்தி, மற்றும் அழகுசாதன உற்பத்திகள் போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பும் கிடைத்து வருகின்றது.
இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










