yarlathirady.com

மெக்சிகோவில் காட்டுத் தீயால் 500 வீடுகள் நாசம் - இருவர் உயிரிழப்பு!

[2024-06-23 11:57:19] Views:[24]

நியூ மெக்சிகோவில் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்தத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், ருயிடோசோ நகரத்தில் வசிக்கும் 8,000 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுனர்.

காட்டுத் தீயால் 1,400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாயின என்றும் அவற்றில் 500 கட்டடங்கள் குடியிருப்புகள் என்றும் நியூ மெக்சிகோ ஆளுநர் மிச்செல் லூஜன் க்ரிஷாம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காட்டுத் தீயால் 9,308 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு கருகி போனதால் இதைப் பேரழிவாக அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நியூ மெக்சிகோ ஆளுநர் ஜூன் 19ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தார்


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.