யாழ் போதனா வைத்தியசாலையில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை..!
[2024-06-22 09:38:21] Views:[10]
யாழ் போதனா வைத்தியசாலையில் பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரின் பங்களிப்புடன் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 51வது இராணுவ படைப்பிரிவின் உதவியுடன், அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் குறித்த கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.










