பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் எழுந்துள்ளார்: புத்தளத்தில் சம்பவம்..!
[2024-06-21 10:40:24] Views:[9]
புத்தளம் - மதுரங்குளிய பகுதியில் பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் எழுந்த சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு காணியொன்றில் பணிபுரிந்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த நபர் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நபர் உண்ணாமல் இருந்ததால் மயக்கமடைந்து தூங்கிவிட்டதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










