இலங்கையில் மேலும் புதிதாக 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டம்..!!
[2024-06-19 11:36:06] Views:[11]
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்ளது.
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனூடாக சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறப்படுத்துவதற்கும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.










