இலங்கையில் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகியுள்ள கூகுள் ஜெமினி AI செயலி...!!
[2024-06-19 09:42:38] Views:[13]
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் Gemini AI செயலியை தமிழில் இலங்கை மற்றும் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த AI இன் உதவிகள் இப்போது பயனர்களை தமிழ் மொழியிலும் தட்டச்சு செய்ய மற்றும் பேச அனுமதிக்கிறது.
இந்த தகவலை கூகுள் CEO சுந்தர் பிச்சை X தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டில் ஜெமினியைப் பெற, பயனர்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கலாம் அல்லது கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.
கூகுளின் முந்தைய குரல் உதவியாளரைப் போலவே, 'ஹே கூகுள்' எனக் கூறி ஜெமினியை அழைக்கமுடியும் என்பது குறிப்பிடதக்கது.










