இலங்கையில் விளைவிக்கப்பட்ட அதிசய மரவள்ளி: ஆச்சரியத்தில் பார்வையிடும் மக்கள்...!!
[2024-06-18 15:12:49] Views:[10]
பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44KG எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளது.
63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேஇந்த மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார்.
மேலும் அவரிடம் விளைம் பயிர்களை உணவு தேவைக்கு எடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை அவரின் பொருளாதார தேவைக்கு விற்று வருகிறார்.
தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில், நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கை சமைப்பதற்காக தோண்டியுள்ளார் பின் அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர்,
அதை எடைபோட்டபோது 44kg இருந்தாக தெரியவந்துள்ளது.
இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.










