yarlathirady.com

யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

[2024-06-18 09:36:13] Views:[9]

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் நேற்று காலை 06.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

நேற்றைய பெருநாள் தொழுகையானது மர்யம் மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) பெருநாள் தொழுகையை நடாத்தியிருந்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்தும், நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்வின் தியாகங்கள், அவரின் வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகளை கருப்பொருளாகக் கொண்டு பெருநாள் விசேட உரையும் நிகழ்த்தியிருந்தார்.

பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் நேற்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏறத்தாள சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.