yarlathirady.com

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி: கிளிநொச்சியில் பதுங்கியிருந்தபோது கைது..!!

[2024-06-18 09:23:18] Views:[10]

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்ப்படுகிறது.

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 12ம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 3,8 கிராம் ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கபட்டார்.

இவர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் பிடியாணை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. .


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.