யாழில் மைதானத்திற்குள் புகுந்த கும்பலால் இளைஞன் மீது வாள்வெட்டு...!
[2024-06-16 11:28:57] Views:[12]
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டிக்கான ஏற்பாடுகளை கழக உறுப்பினர்கள் தமது மைதானத்தில் செய்து கொண்டிருந்த வேளை 12 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து போட்டி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 12 பேர் கொண்ட கும்பலில் 04 பேரை ஊர்மக்கள் பிடித்து மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்த நிலையில், கொடிகாமம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
ஏனைய தாக்குதலாளிகளையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கைதானவர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










