யாழ்ப்பாணத்தை நவீன நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன குழு சந்திப்பு!
[2024-06-15 10:41:35] Views:[10]
யாழ்ப்பாணத்தை நவீன நகரமாக்குவது சம்பந்தமாக வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் உடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன் கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது.
அதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக 09 பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.










