யாழில் வைத்தியசாலை விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!!
[2024-06-13 11:12:49] Views:[9]
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் நேற்று (12) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் கொழும்பு - வெள்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய பிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










