yarlathirady.com

காணாமல்போன அனலைதீவு மீனவர்கள் இருவரும் உயிருடன் மீண்டனர்..!

[2024-06-13 10:31:20] Views:[13]

யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர்.

அனலைதீவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நண்டு வலைக்குப் புறப்பட்ட இருவர் கரை திரும்பவில்லை என அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோவால் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

35 மற்றும் 44 வயதுடைய இரு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்த நிலையில் நேற்று மாலை நாகைபட்டினத்தில் அவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக படகு அலையில் அடித்துச் செல்லப்பட்டே இந்தியாவின் தமிழகத்தின் நாகைபட்டினம் கடற்கரையை அவர்கள் அடைந்துள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.