yarlathirady.com

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய இளைஞன் கைது..!

[2024-06-12 10:20:42] Views:[10]

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய குற்றச்சாட்டில் 24 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை மாணவியான 15 வயதுடைய குறித்த சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தனது உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்ற பின்னர் சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சிறுமியினை கூட்டிவந்துள்ளார்.

சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கணவரான குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.