கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி...!
[2024-06-12 10:17:48] Views:[9]
விபத்தில் கணவர் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.
கடந்த 2024.06.08ஆம் திகதி கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் லியனகே கலும் துஷார சில்வா என்பவர் உயிரிழந்துள்ளார்.
கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.










