Hatton - Colombo வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!
[2024-06-11 10:51:48] Views:[10]
இன்று (11) காலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் வானில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பேருந்துக்கும் வானுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










