யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்கள்
[2024-06-11 10:30:21] Views:[9]
யாழ் - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நேற்று(10) யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.










