நான்கு இளைஞர்கள் யாழில் கைது!
[2024-06-10 11:25:23] Views:[9]
நேற்று (09) மாலை யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கைது நடவடிக்கையில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 25, 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.










