யாழில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு விழா எடுத்த பொதுமக்கள்
[2024-06-09 11:00:48] Views:[9]
நேற்று முன்தினம்(7) 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜீனா கௌரவிப்பு நிகழ்வானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் சூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.










