கூரிய ஆயுதங்களுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!
[2024-06-08 10:26:51] Views:[9]
நேற்று(07) சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டிலே வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.










