குறைக்கப்படும் மின் கட்டணம்..! ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது :
[2024-06-06 13:50:12] Views:[9]
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் விலை 20 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டணக் குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










