யாழில் 28 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது..!
[2024-06-06 11:49:41] Views:[]
யாழ்ப்பாணம் நாகர் கோவிலின் அம்பன் கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது படகு ஒன்றில் 70 கிலோ கேரள கஞ்சா கடத்தி வந்த 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (05) வெத்தலகேணி, மாமுனை கடற்படை பிரிவினரால் அம்பன் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டவேளை படகு தப்பிக்க முயன்றது.
இதனையடுத்து, தப்பிச் சென்ற படகை கடற்படையினர் துரத்திச் சென்று மணற்காடு கடற்பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
குறித்த படகை சோதனை செய்யத கடற்படையினர் அதிலிருந்து ரூ. 28 மில்லியன் பெறுமதியான, 31 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றிதுடன், படகில் பயணித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டைக்காட்டை சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கேரள கஞ்சா மற்றும் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.










