yarlathirady.com

ஆள்மாறாட்டம் செய்து கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

[2024-06-06 10:16:06] Views:[21]

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த யாழ். இளைஞன் ஒருவரை குடிவரவு குடி அகழ்வு திணைக்களம் அதிகாரிகள் கைது செய்துள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யபப்பட்டுள்ளார்.

விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு நிலையத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால், கடவுச்சீட்டைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்பின் இந்த இளைஞனின் சூட்கேஸில் அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த இளைஞன் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

மேலும் கனடா சென்ற பின்னர் அனுராதபுரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவை தரவேண்டுமென உறுதியளித்து, கனடாவில் செல்லுபடியாகும் விசா உள்ள இந்த கடவுச்சீட்டை கொடுத்ததாகவும் இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.