வீட்டுக்குள் வண்டி ஓட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி..!
[2024-06-05 11:25:44] Views:[10]
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் தோன்றியது. பின்னர் அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற இந்த விபத்தினால் குறித்த வீட்டிற்கும், அங்கிருந்த சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மது போதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதுடன், பொலிஸாருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை வாகனத்தில் பயணித்த பொலிஸாரை, நெடுங்கணி பொலிஸார் இரகசியமாக காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டின் முன் பகுதி வேலி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும், வீட்டிற்குரிய மின்சார இணைப்பினையும் மோதி உடைத்துள்ளதால் மின்சார துண்டிக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த சுமார் 20 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கிணி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தனக்கு நட்டஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










