யாழில் பா.ஜ.க வின் வெற்றியை கொண்டாடிய சிவசேனா..!
[2024-06-05 11:23:27] Views:[12]
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க இந்திய பொது தேர்தலில் வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை சிவசேனா அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நேற்று (04) யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் போது வீதியில் சென்றவர்களுக்கு இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டது.










