யாழில் கைதான போலி வைத்தியரின் அதிர்ச்சி தகவல்கள்!
[2024-06-05 11:16:02] Views:[10]
வெளிநாடுகளில் வசித்து வருபவர்களை குறிவைத்து பல இலட்ச ரூபா மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்திய வைத்தியர் பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்ததுடன், வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபா பெற்று வந்துள்ளாதாக பொலிஸ் விசரணைகளில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
மேலும் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் குறித்த இளைஞனை நேற்று (03) யாழ்.நகர் பகுதியில் அதிசொகுசு காரில் இளைஞன் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இளைஞனை விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள், காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. மேலும்இளைஞன் தனித்து குறித்த மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இளைஞனின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்து, இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து, தொடர்புடைய நபர்களை விசாரணை வலயத்திற்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை மன்று இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.










