தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு யார் காரணம் - டக்ளஸ் சுட்டிக்காட்டு
[2024-06-02 09:50:02] Views:[10]
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரும்புரம் வைத்தியசாலை மற்றும் போதைப் பொருள் புணர் வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், “அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் கொண்டு சென்று இந்த தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றேன்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இந்த நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சாரும். ஆகவே அவருக்குத்தான் எங்களுடைய ஆதரவும் இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.










